வாட்ஸ் அப்பின் இணைநிறுவனர் பிரயன் பதவி விலகினார்!
வாட்ஸ் அப்பில் நிறுவனத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரியன் ஆக்டன் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் எனும் குறுஞ்செய்தி நிறுவனம் 2009ஆம் ஆண்டு ஜேன் கோம் மற்றும் பிரயன் ஆக்டனால் தொடங்கப்பட்டது. தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனத்தால் 2014ஆம் ஆண்டு 19 பில்லியன் டாலர்களுக்கு விலைக்கு வாங்கப்பட்டது. இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரயன் ஆக்டன் புதிய நிறுவனம் ஒன்று துவங்க இருப்பதால், வாட்ஸ் அப்பில் இருந்து விலகிக்கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரயனும் ஜேனும் வாட்ஸ் அப்பைத் தொடங்குவதற்கு முன்னால் யாகூ நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.