![tt](http://image.nakkheeran.in/cdn/farfuture/_RFtl6eI8ZbkvBhZzwcapOHRW0mol0GBH102fxgl7cI/1548687830/sites/default/files/inline-images/tcs-in.jpg)
பிராண்ட் ஃபினான்ஸ் (Brand Finance) எனும் அமைப்பு உலக அளவில் முதல் 100 இடத்தில் இருக்கும் மதிப்பு வாய்ந்த பிரண்ட்களின் பெயர்களை ஒவ்வொரு வருடமும் வெளியிடும். அந்த வகையில் இம்முறை சர்வதேச பொருளாதார அமைப்பு மாநாட்டில் பிராண்ட் ஃபினான்ஸ் அமைப்பு, உலகளவில் முதலில் இருக்கும் 100 மதிப்பு வாய்ந்த பிராண்ட்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய நிறுவனமான டாடா குழுமத்தின் பெயர் 86-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்திய நிறுவனங்களிலேயே டாடா மட்டும்தான் முதல் 100 இடத்திற்குள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிராண்ட் மதிப்பு பட்டியலில் கடந்த ஆண்டு 104-வது இடத்தில் இருந்த டாடா நிறுவனம் இந்த ஆண்டு 84-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. டாடா நிறுவனத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு இந்த ஆண்டு 19.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளதாக பிராண்ட் ஃபினான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது சதவீதத்தில் கணக்கிடும்போது 37% வரை உயர்ந்துள்ளது. இதுவே கடந்த வருடம் டாடாவின் பிராண்ட் மதிப்பு 14.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டி.சி.எஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மூலமாகவே இந்த வளர்ச்சி இருப்பதாகவும் பிராண்ட் ஃபினான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.