Skip to main content

இளம்பெண்ணை கோடிஸ்வரியாக்கிய கரோனா தடுப்பூசி!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

AUSTRALIA VACCINE LOTTERY

 

உலகின் பல்வேறு நாடுகளிலும் முழுவீச்சில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில் ஆஸ்திரேலியா நாட்டில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக 20 நன்கொடையாளர்களும், சில நிறுவனங்களும் இணைந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான லாட்டரி போட்டி ஒன்றை அறிவித்தன. இதனைத்தொடர்ந்து இந்த போட்டியில், 27 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

 

இந்தநிலையில் இந்த லாட்டரி போட்டியில் ஜோன் ஜு என்ற 25 வயது பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் 5.4 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லாட்டரி போட்டியில் பங்கேற்ற 3,100 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒட்டுமொத்தமாக 4.1 ஆஸ்திரேலியன் டாலர்கள் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்