Published on 26/10/2023 | Edited on 26/10/2023

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 16 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் உள்ள லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரின் படத்தை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.