அமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்களின் கல்வி கடனை நானே செலுத்துகிறேன் என்று கூறி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர். ராபர்ட் எஃப் ஸ்மித் என்ற அமெரிக்க கோடீஸ்வரர் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க கருப்பு அமெரிக்கர்களில் செல்வாக்குமிக்க தொழிலதிபர்களில் முதன்மையில் இருப்பவர் ஸ்மித். 56 வயதான ஸ்மித், மோர் ஹவுஸ் ஆடவர் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சமீபத்தில் சென்றார். அங்கு உரையாற்றிய ஸ்மித் "எங்கள் குடும்பம் 8 தலைமுறைகளாக இங்குள்ள பகுதியில் வசித்து வருகிறது. எனவே இங்குள்ள 396 மாணவர்களின் கல்வி கடனை ஏற்றுக்கொள்கிறேன் என்றார்".
இதனால் பட்டமளிப்பு விழாவில் கூடியிருந்த மாணவர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இது குறித்து மாணவர்கள் கூறும் போது 'ஸ்மித்' அறிவித்ததை முதலில் நாங்கள் நம்பவில்லை. அதன் பின் அதிகாரப்பூர்வமாக கல்லூரி நிர்வாகம் எங்களிடம் கூறியது. ஆனால் மிக அதிக தொகையை தொழில் அதிபர் ஏற்றுக் கொண்டார் என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர் .