அமெரிக்க இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்குவதற்காக 3,236 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க அமேசான் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த திட்டத்திற்கு அந்நிறுவனம் ‘புராஜக்ட் குய்ஃபர்’ என்று பெயரிட்டுள்ளது.
இந்த செயற்கைகோள்கள் பூமிக்கு அருகில் 367 மைல்கள் (590 கிமீ) முதல் 391 மைல்கள் (630 கிமீ)வரையிலான மண்டல வெளியில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் குழுவாக நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கா அமேசான் நிறுவனம் அமெரிக்க சந்தை ஒழுங்குமுறை அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த திட்டத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகலாம் எனத் தெரிவித்துள்ளது.