Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்!

Published on 09/04/2025 | Edited on 09/04/2025

 

Pensioners at Annamalai University hold indefinite protest!

சிதம்பரம்  அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்கலைக்கழக அயர்ப்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி ஊழியர்களை உடனடியாக பல்கலைக்கழகத்தில் பணியமர்த்த வேண்டும்,  பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை தணிக்கை தடை மற்றும் நிதி பற்றாக்குறையை காரணமாக காட்டி நிறுத்தி வைத்துள்ளதை ரத்து செய்து உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அயர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் தற்போது பணிபுரியும் அரசு துறையிலையே உள்ளெடுப்பு செய்து பணியமர்த்தி கொள்ள வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்கும் வகையில் காத்திருப்பு போராட்டம் புதன் கிழமை(9.4.2025) நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் துரை, குமரவேல், துணைத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கீதா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.

 இதற்கு ஓய்வூதியர்கள் அனைவரும் ஏற்கனவே இதே போல் பேச்சுவார்த்தை செய்து கண் துடைப்பிற்காக அனுப்பி விட்டார்கள் எனவே கோரிக்கை நிரைவேறும் வரை  போராட்டத்தை இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடத்தப் போவதாக அறிவித்துவித்துள்ளனர் இதனை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.  ஓய்வூதியர்கள் இரவு பகல் பாராமல் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதால் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்