கரோனா பரவல் காரணமாக இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த நாடுகளிலிருந்து பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரவும், தங்கள் நாட்டின் வழியாக வேறு நாட்டிற்குச் செல்லவும் வரும் 26 ஆம் தேதி இரவு 11.59 மணியிலிருந்து அனுமதி வழங்கப்படும் எனச் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆறு நாடுகளில் நிலவும் கரோனா நிலையை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நாட்டிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் 10 நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும், 10 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்படும் இடத்திற்கு ஆகும் செலவையும், கரோனா பரிசோதனைக்கான செலவையும் பயணிகளே ஏற்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.