அமெரிக்காவில் பயணிகள் விமானத்தை பழுதுபார்க்க வந்த மெக்கானிக் ஒருவர் கடத்தி ஓட்டிச்சென்று விபத்தாகி இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் ஹாரிஸன் என்ற பயணிகள் விமானத்தை மெக்கானிக் ஊழியர் ஒருவர் பழுது பார்ததுக்கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக அந்த நபர் விமானத்தை எடுத்து இயக்க ஆரம்பித்து வானில்வலம் வந்தார்.
இதனை அறிந்த மற்ற விமானநிலைய ஊழியர்கள் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் எப் 15 என்ற இரண்டு போர்விமானங்கள் மெக்கானிக் திருடி சென்ற அந்த விமானத்தை பின்தொடர்ந்து சென்றது. ஆனால் வானில் தாறுமாறாக பறந்த அந்த விமானமானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கெட்ரான் என்ற தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை திருடி என்ற அந்த மெக்கானிக் பலியானார். விமானத்தை மெக்கானிக் ஊழியர் திருடி ஓட்டிச்சென்று விபத்தான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.