Published on 08/12/2018 | Edited on 08/12/2018

மனிதன் செவ்வாயில் குடியேறுவது பற்றிய பல்வேறு பேச்சுகளும், அதற்கான ஆராய்ச்சிகளும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் காற்று இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளது. செவ்வாயில் வீசும் காற்றின் சத்தத்தை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. மணிக்கு 10 முதல் 15 மைல் வேகத்தில் காற்று வீசுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றி நாசாவின் ப்ருஸ் பெனெர்டட் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று, இதன் மூலம் செவ்வாயில் காற்று உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த விண்கலம் அடுத்தகட்டமாக செவ்வாய் நிலப்பரப்பின் உட்பகுதியை ஆராய உள்ளது எனவும் கூறினார்.