பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்றத் தன்மை, குறைவான அந்நிய செலாவணி கையிருப்பு எனப் பல்வேறு காரணங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் சனா அஜ்மத் என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பாகிஸ்தான் பிரதமரின் ஆட்சி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அப்போது பேசிய அந்த இளைஞர், "இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்திருக்கக் கூடாது. இரு நாடுகளும் பிரியாமல் ஒன்றாகவே இருந்திருந்தால் தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி என் குழந்தைகளுக்கு கொடுத்திருப்பேன். பாகிஸ்தான் பிரதமரின் ஆட்சியை விட மோடியின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. மோடி பாகிஸ்தானுக்கு பிரதமராக கிடைத்திருந்தால் தற்போது உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.