15 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறுவதாக போட்டியிட்ட இந்தியாவுக்கு 55 ஆசிய, பசிபிக் உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 உறுப்பினர் நாடுகள் உள்ள நிலையில், அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை இதில் நிரந்தர உறுப்பினர்கள் ஆகும். அதே நேரம் மீதமுள்ள 10 இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும்.
இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு 5 உறுப்பினர் பதவிகளும், லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளுக்கு 2 உறுப்பினர் பதவிகளும், மேற்கு ஐரோப்பா மற்றும் இதர நாடுகளுக்கு 2 உறுப்பினர் பதவிகளும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு உறுப்பினர் பதவியும் வழங்கப்படுகின்றன.
முதன் முதலாக 1950 ஆம் ஆண்டு இந்தியா இதில் உறுப்பினரானது. அதன் பின் இதனை ஆண்டுகளில் வெறும் 7 முறை, அதாவது 14 ஆண்டுகள் மட்டுமே இதில் உறுப்பினராக தேர்வாகியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தற்போது இந்த கவுன்சில் உறுப்பினராக தேர்வாகும் வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது, இந்தியாவுக்கு அதிகார ரீதியாக கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. மேலும் இதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.