
ஆண் குழந்தை வேண்டி தனது இரட்டைப் பெண் குழந்தைகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள சிகார் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் யாதவ் (30). இவரது மனைவி அனிதா. இந்த தம்பதிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட அசோக் குமாருக்கு, பெண் குழந்தை பிறந்தது அவருக்கு ஏமாற்றம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அசோக்கும் அவரது குடும்பத்தினரும், அனிதாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று அனிதாவை அசோக் குமார் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து, 5 வயதான தனது இரட்டைப் பெண் குழந்தைகளை தரையில் வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தக்கப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகதெரிவித்தனர். இதனையடுத்து, தனது குழந்தைகளின் உடல்களை வீட்டில் இருந்து 2கி.மீ தூரம் உள்ள இடத்தில் அசோக் புதைத்தார்.
இந்த சம்பவம் குறித்து அனிதா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்தனர். மேலும், அந்த உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அசோக் குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.