Skip to main content

வெடித்து சிதறியது டியாங்காங் 1 -சீனா தகவல்

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

சீனாவின் டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் பசுபிக் கடலில் எரிந்து விழுந்ததாக சீனா கூறியுள்ளது. 

2011 ஆம் ஆண்டுமுதல் கட்டுப்பாட்டிலிருந்த விண்வெளியின் சொர்க்கம் என்று சீனாவால் அழைக்கப்பட்ட டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் 2016-ஆம் ஆண்டில் கட்டுப்பாட்டை இழந்தது,  ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்ததால் வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்து பூமியில் அது விழ வாய்ப்புள்ளது  என சீனா கூறியிருந்தது.

 

space

 

அப்படியிருக்க இன்று  இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தை அடைந்த டியாங்காங் 1 வளிமண்டல வெப்ப உராய்வின் காரணமாக வெடித்து சிதறி அதன் பாகங்கள் தென் பசுபிக் கடலில் விழுந்ததாக வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.  

சார்ந்த செய்திகள்