Skip to main content

மியான்மரில் சக்திவாய்த்த நிலநடுக்கம்; இந்தியாவிலும் உணரப்பட்ட தாக்கம்

Published on 28/03/2025 | Edited on 28/03/2025
Powerful earthquake hits Myanmar; affects India too

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் ஆகிய பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக  பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று 11:55 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது. நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் வெளியேறி வீதியில் தஞ்சமடைந்து வருகின்றனர். ராணுவ ஆட்சி நடைபெற்று வரட்டும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்