Published on 21/04/2019 | Edited on 21/04/2019
![bombblast in srilanka](http://image.nakkheeran.in/cdn/farfuture/_LoygF92CQUBNAlIAxswhUSb6rOmflZEnnJ-lSy4SGA/1555823217/sites/default/files/inline-images/srilanka_3.jpg)
இலங்கையில் கொழும்பு பகுதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை கிறிஸ்தவ ஆலயத்திலும், நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மொத்தம் கொழும்புவில் 6 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் பலி என தெரியவந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் பதற்றம் நிலவிவருகிறது.