Skip to main content

இலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் உயிரிழப்பு!

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களின் உறவினரும் வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீம் அவர்களின் மகள் மற்றும் மருமகன் , பேரன்கள் இருவர் உட்பட நான்கு பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை திருநாளன்று இலங்கையில் தேவாலயங்கள் , நட்சத்திர ஹோடடல்கள் உட்பட அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளனர். இதில் நட்சத்திர ஹோட்டலில் வங்கதேச பிரதமர் அவர்களின் உறவினர்கள் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டலிலும் வெடிக்குண்டுகள் வெடித்துள்ளனர். 
 

srilankan incident



இந்நிலையில் ஷேக் சலீம் அவர்களின் மகள் மற்றும் மருமகன் மொஷியுல் ஹக் சவுத்ரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தனது மகன் ஜயான் காணவில்லை என கூறிவந்த நிலையில் இலங்கை அரசு வங்கதேச பிரதமர் பேரன் ஜயான் தீவிரவாத குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜயானின் உடல் இன்று வங்கதேசம் எடுத்ததுச் செல்லப்படுகிறது. மேலும் ஜயானின் தந்தை மற்றும் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் வங்கதேசம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் சுமார் வெளிநாட்டவர்கள் 35 பேர் உட்பட இது வரை 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை அரசுக்கு அந்நாட்டு காவல்துறை உயர்அதிகாரி திரு.புஜுத் ஜெயசுந்தரா அவர்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி அரசுக்கு அளித்த அறிக்கையில் இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என அரசுக்கு  தெரிவித்திருந்தார். மேலும் இந்திய அரசும் இலங்கைக்கு ரகசியமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இத்தகைய கொடூர தாக்குதல் அரங்கேறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
 

பி.சந்தோஷ், சேலம் .

சார்ந்த செய்திகள்