Skip to main content

"அரைநிர்வாண நிலையில் நிக்கவைத்து அசிங்கப்படுத்திய போலீஸ்.. அவமானத்தில் விஷம் குடித்த இளைஞர்..!"

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டது எப்போதும் வென்றான் காவல் நிலையம். நேற்று முன்தினம் சிவராத்திரி என்பதால், அருகே உள்ள ஆதனூர் கோவிலுக்கு எப்போதும் வென்றானை சேர்ந்த தமிழ்செல்வம் (21) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

 

police

 

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ.அருள்ராஜ், சந்தேகத்தின் பேரில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி வண்டியின் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது வண்டியின் ஆவணங்களை கேட்டதற்கு, வண்டி உரிமையாளர் தாம் அல்ல என்றும் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான வண்டி என்றும் கூறியிருக்கிறார்.

 

 

வண்டியை கைப்பற்றிய போலீஸார், ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அனுப்பிவிட்டனர். ஸ்டேசனுக்கு தனது நண்பர் இளையராஜா உடன் சென்ற தமிழ்செல்வம் வண்டியை தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் உரிமையாளர் மணிகண்டன் ஆவணங்களுடன் வந்தால் தான் வண்டியை விடுவிப்போம் என்று கறாராக காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.

 

police

 

இந்த காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ அருள்ராஜ் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. ஏற்கனவே சரித்திர பதிவேட்டில் மணிகண்டன் என்பவருடைய பெயர் இருந்ததால், அந்த மணிகண்டன் தான், இந்த வண்டியின் உரிமையாளர் என நினைத்து வண்டியை ஒப்படைக்கவில்லை. (ஆனால் காவல்நிலைய பட்டியலில் உள்ள மணிகண்டன் வேறு நபர்) இந்த மணிகண்டன் அன்றைய தினம் மதுபோதையில் இருந்ததால், காவல் நிலையத்திற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

 

தமிழ்செல்வமும், இளையராஜாவும் வண்டியை கேட்டு அடம்பிடித்ததால், இருவரையும் ஸ்டேஷனில் ஜட்டியோடு நிற்கவைத்து விசாரித்து அனுப்பி உள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்செல்வம் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் இன்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 

காவல் துறைக்கு இது புதிதல்ல..

 

காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களை போலீஸார் ஒருமையில் திட்டுவதும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதும் புதிதல்ல. நூற்றுக்கு 95 சதவீத ஸ்டேசன்களில் இந்த அத்துமீறல் தொடரத்தான் செய்கிறது. குற்றவாளியையும் சக மனிதனை போல் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையமும் அறிவுறுத்தினாலும் அதையெல்லாம் காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. இப்போது மதுரை மாவட்டத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றும் ஜெயபாண்டியன், இதற்கு முன்பு பணியாற்றிய காவல் நிலையத்தில், முதியவர் ஒருவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதில், மன உளைச்சலில் அவர் இறந்தே போனார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்தபோது, முதியவருக்கும் அந்த சம்பவத்திற்கும் தொடர்பே இல்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு வரும்போது அந்த முதியவர் உயிருடன் இல்லை.

 

 

அந்த பிரச்சனையால் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார் விஜயபாண்டியன். அங்கும் முதியவர் ஒருவரை ஒருமையில் பேசி, தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தினார். அவர் மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டார். விசாரித்த நீதிபதி ஜெயபாண்டியனுக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்