
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட இளஞ்செம்பூர் அருகே உள்ள எம்.சாலை கிராமத்தில் தாயாருடன் படுத்திருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனை பாதிக்கபட்ட சிறுமியின் தாயார் திலகவதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கடலாடி அருகே உள்ள எம் சாலை என்ற கிராமத்தில் தன் தாயாருடன் இரவு உறங்கி கொண்டிருந்த சிறுமியை அங்கிருந்து தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது நேற்று முன்தினம் இரவு எட்டு மணியளவில் அருகில் படுத்திருந்த தன் குழந்தையை காணாமல் தாயார் எழுந்து தேடி அலைந்து கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் அழுது கொண்டிருந்த சிறுமியை பார்த்ததில் உடலில் காயங்களுடன் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து அருகிலுள்ள இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் கந்தசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் காயமடைந்த சிறுமியை சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இளஞ்செம்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.