Skip to main content

உங்களுடைய கோரிக்கைகளை கலைஞரின்பேரன் நிறைவேற்றி கொடுப்பான்!;உதயநிதி அதிரடி பேச்சு

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மூன்று முழக்கங்களை முன்வைத்து நம்முடைய செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

 

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.

 

uthayanithi

 

அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்களும் அந்தந்த பகுதிகளில் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஸ்டாலின் மகனான உதயநிதியும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலைக்கோட்டை தொகுதியில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றியத்தில் இருக்கும் பழைய வத்தலக்குண்டில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தை வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் முருகன் ஏற்பாடு செய்திருந்தார். 

      

uthayanithi

 

இந்த ஊராட்சி சபை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி கலந்து கொண்டார். அது போல் கழக துணை பொதுச்செயலாளரும்.முன்னாள் அமைச்சரான ஐ.பெரியசாமி. மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளர் ,பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ பி செந்தில்குமார் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 இந்த ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகிறார் என்ற விஷயம் பொதுமக்களின் காதுக்கு எட்டியதின் பேரில் பழைய வத்தலக்குண்டில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் திரளாகவே ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

  

இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலினோ.... நான் தலைவர் மகன், கலைஞரின் பேரன் அதுபோல் திமுகவில் நானும் ஒரு தொண்டனாக இருக்கிறேன். என்னுடைய வளர்ச்சியை பிடிக்காத அதிமுக, பிஜேபியினரோ  எந்த ஒரு பதவியிலும் இல்லாதவர் எப்படி ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்கலாம் என்கிறார்கள். ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொள்வது ஏதோ தேசத்துரோகம் போல்  நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சிக்கு கூடிய விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார்கள். அதன் மூலம் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார். 

 

uthayanithi

   

அப்பொழுது கூட்டத்தில் இருந்து இருந்த பழைய வத்தலக்குண்டு சேர்ந்த உமாதேவி பேசும்போது... மதுக்கடைகள் மூலம் மாணவ சமுதாயம் சீரழிந்து வருகிறது. இப்படிப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும். அதுபோல் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுபோல் கல்விக்கடன் விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம் இல்லாததால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு  விவசாயிகள் பலர் தற்கொலைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தலைவர்களும், நெம்பர்களும் இல்லாமல் நிர்வாகம் சீர் கெட்டுக் கிடக்கிறது. குடிக்க கூட தண்ணீர் இல்லை, சாக்கடை சுத்தம் செய்வதில்லை, லைட்வசதி இல்லை அது போல் பொதுக் கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் ரோட்டோரங்களில் ஒதுங்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். இப்படி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத அரசு தொடர்ந்து நீடிக்க கூடாது என்று கூறினார்.

        

 

அதுபோல் கலாவதி பேசும்போது, எங்க ஊருக்கு அருகே உள்ள ராமநாயக்கன் பற்றி வழியாகத்தான் வைகை ஆற்று தண்ணீர் போகிறது. ஆனால் எங்களுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லை. அந்த வழியாக போகக்கூடிய வைகை ஆற்று தண்ணீரை எங்க பகுதிக்கும் கொடுக்க நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் ஐபி ஐயா இந்த பகுதியில் பெரும்பாலான முதியவர்களுக்கு உதவித்தொகை வாங்கி கொடுத்தார்கள். அதையும் இந்த அரசு நிறுத்தி விட்டது. அதனால் அந்த முதியோர்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முதியோர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்க நீங்கள் வழி செய்ய வேண்டும் என்று கூறினார். 

 

 

அதைத் தொடர்ந்து பேசிய பிரியாவோ... நாங்கள் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கிறோம். அப்படியிருந்தும் எங்களுக்கு சாதிச் சான்றிதழை இந்த அரசு கொடுக்க மறுக்கிறது. அதனால ஆறு வயது ஆகியும் கூட எங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களுக்கு சாதிச்சான்றுக்காக வேண்டும் என்று கூறினார். 

 

அதேபோல் கட்டகாமன்பட்டியை சேர்ந்த பிரபாகரனோ... எங்க தேவேந்திரகுல சமூகத்தை எஸ்.சி. பட்டியில் இருந்து நீக்கிவிட்டு பிசி பட்டியலில் சேர்க்க வேண்டும். வரும் தேர்தலில் இந்த தகுதியை  திமுகவுக்குதான் ஒதுக்க வேண்டுமே தவிர கூட்டணி கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்று கூறினார்.

    

இப்படி இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும், சுட்டிக்காட்டி பேசினார்கள் அதையெல்லாம் உதயநிதி அருகில் உட்கார்ந்து இருந்த கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஒவ்வொன்றாக குறிப்பு எடுத்து இறுதியில் உதயநிதியிடம் கொடுத்தார்.

    

அதைப் பெற்றுக் கொண்ட உதயநிதியை இறுதியில் மைக்கை பிடித்து பேசும்போது... உங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மக்களின் கோரிக்கைகளையும், நமது ஆட்சி வந்தவுடன் இந்த கலைஞரின் பேரன் நிறைவேற்றி கொடுப்பான். இது வெறும் வாக்குறுதி என்று நினைக்காதீர்கள் சொல்வதைத்தான் செய்வோம் செய்வதை தான் சொல்வோம். நான் கலைஞரின் பேரன் அதையெல்லாம் நிறைவேற்றி கொடுத்துவிட்டு உங்களை  மீண்டும் இதே மேடையில் வந்து சந்திக்கிறேன் என்று கூறி ஊராட்சி சபை கூட்டத்தை முடித்து விட்டு புறப்பட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.