
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் தாங்கள் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சாமுண்டீஸ்வரி இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கணவர் பன்னீர்செல்வம் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கணவர் இறந்த சோகத்திலும், குழந்தை இல்லாததால் சாமுண்டீஸ்வரி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
காட்பாடி பிரம்மபுரம் தாங்கள் பகுதியில் கணவர் பன்னீர் செல்வம் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் மனவிரக்தியில் அன்று இரவு மனைவி சாமுண்டீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காட்பாடி காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெண் வீட்டார் சாமுண்டீஸ்வரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி எரிக்க வேண்டாம், புதைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொள்ளாத பிரம்மபுரம் பகுதி பெரியோர்கள் இது போன்ற தூக்கிட்டவர்களின் உடலை எரித்து விடுவது தான் எங்களது ஊரின் வழக்கம் என்று கூறியுள்ளனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரம்மபுரம் பகுதியினர் பெண் வீட்டார்களை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சாமூண்டீஸ்வரியன் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை அந்த ஊர் பெரியவர்களும் அவர்களது உறவினர்களும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டனர். பன்னீர்செல்வத்தின் மரணத்தில் இன்று வரை சந்தேகம் உள்ளதால் பன்னீர் செல்வத்தின் மரணத்தை போல் எங்களது மகளின் (சாமுண்டீஸ்வரி) மரணத்தையும் மூடிமறைப்பதாக பெண் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கோரிக்கை விடுத்துள்ளனர்.