Skip to main content

சங்க பணம் என்னாச்சு? பதில் சொல்லிவிட்டு வரட்டும்: விஷாலுக்கு எதிராக ஏ.எல். அழகப்பன்...

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
A. L. Alagappan




தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால். இவருக்கு எதிரான அணியினர் நேற்று தி.நகரில் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அலுவலகத்திற்கு பூட்டு போட்டது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர், நாங்கள் கேட்கும் விளக்கத்துக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டு, சங்கத்துக்குள் வரட்டும். இல்லையென்றால் ராஜினாமா செய்துவிட்டு வெளியே செல்லட்டும். எங்களுடன் இப்போது 300 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். பொதுக்குழு கூட்டினால் அனைவருமே வருவார்கள்.

 

இதற்கு முன்பாக நடந்த பொதுக்குழுவில் கேள்வி கேட்டதற்கு, ஜனகனமண பாட்டு பாடிவிட்டு ஓடிவிட்டனர். அதற்குப் பிறகு ஒருவருடமாகியும் பொதுக்குழுவை கூட்டவே இல்லை. சங்கத்தின் கணக்கில் இருந்த பணத்தை காணவில்லை.

 

விஷால் நிறைய கிரிமினல் வேலைகளைச் செய்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் அவருக்கு ஷேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ் படத்தை கன்னடத்தில் போய் வெளியிடமுடியாது. அது மாதிரியான சட்டதிட்டங்கள் கன்னட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் இருக்கிறது. நம்ம கவுன்சில் சட்டதிட்டத்தின்படியும், கன்னடப் படத்தை வெளியிட மாட்டோம். இப்போது, விஷாலே கன்னடப் படத்தின் தமிழ் டப்பிங்கை வாங்கி வெளியிடுகிறார்.

 

தொலைக்காட்சிகளிலிருந்து எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பதே தெரியவில்லை. இது தொடர்பான விவரம், எந்தவொரு உறுப்பினருக்குமே தெரியவில்லை. இனிமேல், அவர்கள் செய்வதற்கும் வாய்ப்பில்லை. விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும்.

 

தற்போது சங்கத்தில் துணைத்தலைவர்களாக இருக்கும் கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் இருவருமே தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வந்ததே கிடையாது. இந்தச் சங்கத்துக்கு தலைவர் விஷால் வந்து 7 மாதமாகிறது. அப்புறம் எப்படி சங்கம் செயல்படும் என்றார். 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்