Published on 25/10/2019 | Edited on 25/10/2019

கர்நாடக மாநிலம் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் கொள்ளையன் முருகனை அக்டோபர் 27ல் திருச்சி தனிப்படை காவலில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொள்ளையன் முருகன் மீது தமிழகத்தில் 17 வழக்குகள், கர்நாடகாவில் 72 வழக்குகள், ஆந்திராவில் 4 வழக்குகள் என மொத்தம் 93 வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 28 கிலோ நகைகளில் 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.