Skip to main content

சொந்த ஊருக்கு வந்த மகன் மாயம்... சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் கதறிய பெற்றோர்...

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் மதுரா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ஐய்யனார். வயது 25. டிப்ளமோ படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் ஓட்டுநராக பணிசெய்து வரும் அவர் நேற்று காலை தான் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த ஐய்யனார் வீட்டில் இருந்து அருகே கூவாகம் ஏரியிலுள்ள காளி கோவிலுக்கு சென்றதாக தெரிகின்றது. அப்போது   அதை ஊரைச் சேர்ந்த வாலிபர்களுடன் இருந்துள்ளதாக தெரிகின்றது.  ஆனால் சென்ற வாலிபர் இரவு வீட்டிற்கு  சாப்பிட வரவில்லை, இரவு வெகு நேரம் ஆகியும் வராததால் அவரது தாய் ,தந்தை மற்றும் உறவினர்கள் ஐய்யனாரை தேடியுள்ளார்கள். 


  iyanar


இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பழனி என்ற விவசாயி இன்று காலை வழக்கம்போல் வயலுக்கு சென்றுள்ளனர். அப்போது பழனிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சுமார் 75 அடி ஆழத்தில் கிணற்றில் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் கட்டப்பட்ட நைய்லான் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். 


 

கிணற்றின் உரிமையாளர் பழனி என்பவர் இறந்துபோன தூக்கில் தொங்கும் ஐய்யனாரின் தந்தை கோவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவிந்தன் மற்றும் உறவினர்கள், கிராம  மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கோவிந்தன் தனது மகனின் பிரேதத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார். பிறகு தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும், தனது மகனை அடித்து கொலைசெய்து கிணற்றில் உள்ள நைலான் கயிற்றில் தூக்கில் மாட்டி தொங்கவிட்டு விட்டு சென்றுள்ளதாக சந்தேகம் உள்ளது என்றனர். 
 

இந்த சம்பவம் அறிந்த  திருநாவலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம்  முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரிக்கு எடுத்து சென்றனர்.  இது திட்டமிட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டதா அல்லது வாலிபர் தானே தற்கொலை செய்து கொண்டாரா என திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்