Skip to main content

சேலம்: காய்கறிகள், ஆவின் பால் வீட்டுக்கே வரும்! வெளியே போக வேண்டாம்! தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

கரோனா நோய்த்தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. என்னதான், சமூக விலகல், முகக்கவசம் அணிதல் குறித்து தொடர் பரப்புகளை செய்தாலும்கூட, பொதுவெளியில் மக்கள் 100 சதவீதம் அவற்றை பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுகின்றனர். இதனாலும் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்களுக்காகக் கூட வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், குடியிருப்புகளை நோக்கி நடமாடும் காய்கறி கடைகள் செல்லும் திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் அறிமுகப்படுத்தி உள்ளது.


இதற்காக 80 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி கடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 20 நடமாடும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன. வீடு வீடாகச் சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இத்திட்டத்திற்கு கணிசமான வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து, மேலும் 50 நடமாடும் காய்கறி கடைகளும், தற்போது மேலும் 10 கடைகள் என மொத்தம் 80 நடமாடும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


இந்த வாகனங்கள் இரண்டு விதமான சேவைகளை வழங்கும். அதன்படி, தினமும் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஆவின் முகவர்கள் மூலம் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளுக்கே நேரில் சென்று பால் விற்பனை செய்யப்படும். அதன்பிறகு 7.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இதே வாகனங்கள் மூலம் காய்கறிகள், மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்படும். 
 

தச



பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் எளிதில் கிடைப்பதற்கு வசதியாக சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களின் விவரங்களை பின்வரும் தொலைபேசி எண்களில் தெரிவித்தால் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்படும்.

 

sathish-corporation commissioner


சூரமங்கலம் மண்டலம் - 0427 2387514, 2387595

அஸ்தம்பட்டி மண்டலம் - 0427 2314646, 2310095

அம்மாபேட்டை மண்டலம் - 0427 2263161, 2250300

கொண்டலாம்பட்டி மண்டலம் - 0427 2461616, 2461111


சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்து, வீடுகளுக்கே வரவழைத்துப் பெற்றுக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு ஆணையர் சதீஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்