Skip to main content

வொக்கேஷனல் பிரிவு மாணவர்களும் பொறியியல் படிக்கலாம்-அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறைகளிலும் வரும் கல்வியாண்டில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர்  வே.முருகேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.

 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

 

இந்தப் பல்கலைக்கழகத்தில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, சில புதிய பாடத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் அனுமதி சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆன்லைன் கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளது. 

 

 Vocational category students can study engineering - Annamalai University Vice-Chancellor interview

 

பொறியியல் புலத்தில் புதிய பட்டப் படிப்புகளாக பி,இ., சி.எஸ்.இ. பிக் டேட்டா அனலிடிக்ஸ் (B.E., CSE Big Data Analytics), பி.இ., சி.எஸ்.இ., ஏ.எல். அண்டு மெஷின் லேர்னிங் (B.E., CSE (AL And Machine learning) படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த இரு படிப்புகளிலும் 60 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். மேலும் இந்த ஆண்டு புதிய படிப்புகளாக எம்.எஸ்சி., டேட்டா சயின்ஸ் (M.sc., Data Science)- 30 இடங்கள், எம்.பி.ஏ., பிசினஸ் அனலிடிக்ஸ் (MBA Business Analytics)- 60 இடங்கள், எம்.பி.ஏ., இன்பராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் (MBA Infrastructure Management)- 50 இடங்கள், எம்.காம்., பிசினஸ் இன்டலிஜன்ஸ் (M.Com., Business Intelligence) - 30 இடங்கள்.

 

 

 

 டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் - 60 இடங்கள், பி.வோக். மெக்ட்டிரானிக்ஸ் (B.Voc.Mechetronics)- 60 இடங்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர்களுக்கான எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ., (Executive MBA) (2 ஆண்டு) படிப்பு - 50 இடங்கள், முதுநிலை பட்டய படிப்பான டிப்ளமோ இன் பிசினஸ் அனலிடிக்ஸ் - பிசினஸ் இன்டலிஜென்ஸ் (PG Diploma In Business Analytics and Business Intelligence)-20 இடங்கள், டிப்ளமோ இன் இ-காமர்ஸ் - மேனேஜ்மென்ட் (Diploma in E-Commerce and Management)- 60 இடங்கள், பி.வோக். லாஜிஸ்டிக்ஸ் (B.Voc.Logistics)- 60 இடங்களுக்கும் அனுமதி சேர்க்கை வழங்கப்படுகிறது.

 

மேலும் வேளாண் துறையில் பட்டய (Diploma in Agriculture) படிப்புக்கான அனுமதி சேர்க்கை எண்ணிக்கை 100-லிருந்து 200-ஆகவும், தோட்டக்கலை (Diploma in Horticulture) படிப்புக்கான அனுமதி சேர்க்கை 50-லிருந்து 100-ஆகவும் உயர்த்தப்படுகிறது.

 

 

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 72 படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் சேர வொக்கேஷனல் பிரிவில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டில் 92 ஆயிரம் பேர் பயின்று வருகின்றனர். இதில், வருகிற கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் வரை அனுமதி சேர்க்கை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

 

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனது 90-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.  இவருடன் பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் திருவள்ளுவன் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள்  உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்