சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காவல்துறையினர் எமதர்மராஜா மற்றும் சித்திரகுப்தன் வேடமிட்டு வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் தலைக்கவசம் அணியாதவர்கள், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசிக்கொண்டு வருபவர்களை சித்திரகுப்தன் மறித்து, வாகன ஓட்டியின் ஆயுட்காலம் பார்த்து கூறியதும், எமதர்மராஜா சாலை விதிமுறைகளை மீறியதால் மரணம் கண்டிப்பாக தேடி வரும் என்பது போல் கருப்பு கயிற்றை மாட்டி உயிரை எடுப்பது போல் நடித்து காட்டினார்.
அதேசமயம் தலைக்கவசம் அணிந்து வருபவர்களை ஆயுட்காலம் அதிகமாக உள்ளது என பாரட்டி அனுப்பி வைத்தனர். இது போல் விருத்தாலம் பாலக்கரை, பஸ் நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதை ஆர்வத்துடன் கண்டு களித்தும் , பாராட்டியும் சென்றனர்.