






‘தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆஸ்கர் விருதாமே?’என்று அவரை எம்.எல்.ஏ. ஆக்கிய போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து வாக்காளர் ஒருவர் முகநூலில் கேள்வி கேட்க,’அட நீங்கவேற.. இது அது கிடையாது. சிகாகோவில் நடைபெற்ற உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஓ.பி.எஸ்.ஸுக்கு சர்வதேச வளரும் நட்சத்திரம்- ஆசியா விருது வழங்கப்பட்டிருக்கிறது.’ என்று இன்னொருவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ் மகன் விருதினைத் தொடர்ந்து, இரண்டாவதாக சர்வதேச வளரும் நட்சத்திரம்- ஆசியா விருதும் பெற்றுள்ளார். இன்னும் பல விருதுகள் அவருக்காகக் காத்திருக்கின்றன என்று அவரது விசுவாசிகள் உற்சாகமாக சொல்கின்றனர்.
விருது விழாவில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர் என்கிறது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.