அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.
நீதிபதி பரிமளா குற்றச்சாட்டு வனைவினை (CHARGE FRAME) பதிவு செய்து, கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தது, அவர்களைத் தவறான பாதைக்கு வழி நடத்த கூட்டுச் சதி செய்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் பதிவாகியிருக்கும், குற்றச்சாட்டை மூன்று பேரும் செய்தது உண்மையா? என்று கேட்டபோது, மூவரும் தாங்கள் இந்தக் குற்றச்சாட்டை செய்யவில்லை என்றும், இது பொய் வழக்கு என்றும் தெரிவித்தனர்.
அப்போது நிர்மலா தேவி, நான் மாணவிகளைக் குழந்தைகளாகவே பார்த்து வந்தேன். மற்ற படி எந்தத் தவறும் செய்யவில்லை என்று நீதிபதி முன்னிலையில் விளக்கம் தந்தார். இதனையடுத்து மூவரும் அக்டோபர் 23- ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.