Skip to main content

இலங்கை எம்.பியுடன் விஜயகாந்த் மகன் சந்திப்பு ! 

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

 

விஜயகாந்த் வீடு, கல்லூரி எல்லாம் ஏலத்திற்கு வந்திருக்கிறது என்கிற பத்திரிகை விளம்பரத்திற்கு பிறகு தேமுதிக சார்பில் பிரேமலதா விளக்கம் கொடுத்த நிலையில் விஜயகாந்தின் இளையமகன் திருச்சியில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழாவில் பங்கேற்பதற்காக விஜயபிரபாகரன் எஸ்.ஆர் விடுதியில் தங்கியிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் ஊழல் செய்து கடனாளி ஆகவில்லை. சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்துதான் கடன் பெற்றார் என்றார். கடனை அடைக்க கால அவகாசம் தரப்படவில்லை. கடன் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என்றார். 

t

.இதற்கு இடையில் காலையில் தான் தங்கியிருந்த எஸ்.ஆர்.எம். விடுதியில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு எம்பியும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான செய்யித் அலி ஸாஹிர் சந்தித்து பேசினார்.

 

அப்போது அவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும் நாட்டு நடப்புகள் குறித்தும் விஜயபிரபாகரனிடம் குறித்து பேசியிருக்கிறார்கள். புதிதாக அரசியலில் நுழைந்து இருக்கும் விஜயபிரபாகரனுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 

 

விஜயகாந்திற்கு இலங்கையில் அதிக ரசிகர்களும் நலம்விரும்பிகளும் இருப்பதாக அங்கு வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். 

 

விஜயகாந்த் இலங்கை தமிழர்களுக்காக தன்னுடைய பிறந்தநாளை புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்