Published on 23/10/2019 | Edited on 23/10/2019

கடந்த 21-ந் தேதி அப்துல் ஹமீத் என்கிற பிலால் ஆஜியா உடல் நலிவுற்று இப்பதால் உயர் நீதி மன்ற உத்தரவுப்படி , கருணை அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். 1991-ம் ஆண்டு என்கிற வீர சிவா என்கிற சிவா கொலையான வழக்கில் இவர் கைதாகி இருந்தார். பிலால் ஆஜியா. பல வருடங்களாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் உடல் நோய்வாய்ப்பட்டு இருந்தார் .
ஆறு மாதங்களுக்கு முன்னரே ஹைகோர்ட் பிலால் ஆஜியாவை நோயின் காரணமாக விடுதலை செய்யச் சொல்லி உத்தரவிட்ட பின்னரும், அவரை சிறையிலேயே ஏன் வைத்திருந்தார்கள்? என இஸ்லாமிய அமைப்புகளும், பெரியாரிய இயக்கங்களும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் பிலால் ஆஜியா இன்று சிறையிலேயே மரணம் எய்தி விட்டார்