Skip to main content

ஏட்டம்மாவின் லீலைகளாம்! -மது குடித்து கமெண்டுக்கு ஆளான மகளிர் காக்கி!

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

 

இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய காவல்துறை தமிழ்நாடு காவல்துறை ஆகும். அதுபோலவே, நம் நாட்டில் பெண் காவலர்கள் அதிகமாகப் பணிபுரிவதும் தமிழகத்தில்தான். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சனைக் கொடுமையை ஒழிக்கவும், பெண் காவலர்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், 1996-இல் தமிழகம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. பிறகு, பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படையும் உருவாக்கப்பட்டது. 

மன உளைச்சல் ஏற்பட்டு காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்கு, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு யோகா பயிற்சியெல்லாம் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது.  


 

police


 

இதே தமிழகத்தில், ஒரு காவலர், அதுவும் பெண் காவலர், தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கு, மது அருந்துகிறார்.  காவல்துறை வாகனத்தில், காக்கி சீருடையில், இந்தத் தகாத காரியத்தைச் செய்கிறார். இந்தக் காட்சியை,   அவரது ஆண் நண்பர்,  தன் செல்போன் கேமராவில் வீடியோ எடுத்துத் தொலைக்கிறார்.  “ஏய்.. சரக்கை எடுத்துக் காட்டுடி.. காட்டுடி..  கண்ணைக் காட்டுடி..” என்று கூறிவிட்டு,   ‘ஏட்டம்மாவின் லீலைகள்‘  என்று கமெண்ட் வேறு அடிக்கிறார். உடனே,  வெகு சிரமப்பட்டுத்  தன் விழிகளை விரிக்கிறார் அந்தப் பெண் காவலர். “சரி போதை.. ஃபுல் அடிச்சிட்டா.. ஃபுல் அடிச்சிட்டு உட்கார்ந்திருக்கா.” என்று குஷியுடன் ஆண் நண்பர் கூற, சிணுங்கலுடன் புன்னகைக்கிறார் அந்தப் பெண் காவலர். ஆண் நண்பரையும் “நீ குடி.. குடிடா..” என்று கெஞ்சுகிறார். அவர் திண்டுக்கல்லில் பணிபுரியும் மகளிர் ஏட்டு (DGL 283) என்பதை, அவரது சீருடையில் உள்ள பேட்ஜ் காட்டிக் கொடுத்துவிட்டது. 
சீருடையில் திண்டுக்கல் சாமிநாதபுரத்தில் மது அருந்திய மகளிர் காக்கியின் பெயர் ஜெய்னுப் நிஷாவாம். இவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது காவல்துறை.  

ம்ஹூம். அன்றே பாடினார் மகாகவி பாரதி -

‘மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே’

அட, கொடுமையே! பாரதியின் கவிதை வரிகளை, திண்டுக்கல் மகளிர் காக்கி, இத்தகைய செயலிலா மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்?

சார்ந்த செய்திகள்