Skip to main content

குற்றவாளிகளை பிடிக்கச்சென்ற பெண் காவலர்கள் விபத்தில் உயிரிழப்பு 

Published on 04/11/2024 | Edited on 04/11/2024

 

Vehicle accident; Women policemen who went to catch the criminals lost their lives

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மாதவரம் மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ. அதே காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணியாற்றி வரும் நித்யா. இவர்கள் இருவரும் குற்றவாளி ஒருவரை படிப்பதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிறுநாவலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பின்புறமாக வந்த கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் ஜெய்ஸ்ரீ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதேநேரம் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நித்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ பைக் பிரியை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து புல்லட்டிலேயே பயணித்து லடாக் வரை சென்று அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் அளவிற்கு பைக் மீது மோகம் கொண்டவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற காவலர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காரை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்