Skip to main content

ஆயிரம் முறை சொல்வேன் சமஸ்கிருதம் இறந்து போன மொழி- வைகோ ஆவேசம்!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழை விட சம்ஸ்கிருதம்தான் தொன்மையான மொழி என அச்சிடப்பட்டிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்த வருகின்றனர். 

vaiko interview

இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது என புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது தவறானது. பாடப்புத்தகத்தில் தமிழ் பற்றி தவறாக குறிப்பிட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை எனவே கண்டிப்பாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தார். 

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைகோ ,  

சமஸ்கிருதம் ஒரு இறந்து போன மொழி இதை நான் ஆயிரம் முறை கூறுவேன். சமஸ்கிருதம் ஒரு டெத் லாங்குவேஜ் என வட மாநிலத்தவர்களுக்கு புரியும்படி சொல்கிறேன். தமிழை விட சமஸ்கிருதம்தான் பழமையானது என்ற ஒரு பொய்யான தகவலை தமிழக பாடத்திட்டத்தில் திணித்துள்ளனர். அமைச்சர் செங்கோட்டையனை நான் குறைகூறவில்லை. அவர் தவறான தகவலை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் தமிழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம்தான் பழமையானது என பொய்யான தகவலை திணித்தத அந்த கயவர் யார்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்