Skip to main content

மாணவிகளை ஏமாற்றிய டிக் டாக் காதல் மன்னன்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

"டிக் டாக்கினை கொண்டு, வீடியோ எடுத்து என்னைப் போன்ற பல மாணவிகளை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தென்காசி மாவட்ட எஸ்.பி.க்கு ஆன்லைனில் புகார் அனுப்பப்பட 19 வயதே ஆன இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 
தென்காசி மாவட்டம் ஆனைக்குளம் அருணாசலப்புரம் வடக்கு வீதியினை சேர்ந்த செல்வராஜின் மகன் கண்ணன். 19 வயதே ஆன இவன் கண்ணைக்கவரும் வண்ண ஆடைகளை உடுத்தி நாளொரு வண்ணமாக kannansnkr எனும் ஐ.டி.யில் 947 வீடியோக்களைப் பதிவிட்டு டிக் டாக்கில் காதல் மன்னனாக பிரபலம். டிக் டாக்கில் இந்த காதல் மன்னனை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 4 லட்சம் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

tenkasi tiktok incident one person arrested police


இவனை நேற்று (02/03/2020) கைது செய்த சேர்ந்தமரம் காவல்துறையினர், "சுரண்டை, வீரசிகாமணி மற்றும் சேர்ந்தமரம் போன்ற பகுதிகளில் சாலையோரம் நடந்துவரும் பள்ளி, கல்லூரி மாணவிகள், மற்றும் பொதுமக்களை அவர்கள் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டதும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததுமாக" வழக்கினைப் பதிவு செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

 
"எனக்கும் அவனுக்கும் டிக் டாக் மூலம் தான் பழக்கம் ஏற்பட்டது. அவனுடைய வீடியோவினைப் பார்த்து லைக் போட, அதனைக் கண்டு அவன் என்னுடைய இன்பாக்ஸிற்கு வந்து மெஜேஜ் அனுப்ப நெருங்கி பழக நேரிட்டது. இதனால் அவனுடன் வீடியோ சாட்டும் செய்ய வேண்டியதாயிற்று. அவன் அந்த வீடியோவினை பதிவு செய்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான். பணம் தரவில்லையென்றால் வீடியோவினை வெளியிடுவதாகவும் மிரட்டினான். 

இதற்காக ரூ.2 லட்சம் வரை அவனிடம் கொடுத்துள்ளேன். நான் தான் இப்படியென்றால் என்னுடைய தோழிகளுக்கும் இதே நிலைமைதான். அத்தனை பேரிடமும் காதல் செய்வதாக நடித்து வீடியோ எடுத்து லட்சக்கணக்கான ரூபாயை மிரட்டியே கறந்துள்ளான். விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென," என குற்றலாம் பகுதியிலுள்ள கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் மாவட்ட எஸ்.பி.க்கு புகார் அனுப்ப, அது அப்படியே எங்களுக்கும் பார்வர்டு ஆக எங்களுக்கும் வந்தது. விசாரித்து அவனை கைது செய்தோம். உண்மையில் அவன் கிரிமினலான காதல் மன்னன் தான்.!!" என்கின்றனர் சேர்ந்தமரம் காவல்துறையினர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்