![Union Minister meeting with Tamil Nadu Chief Minister!](http://image.nakkheeran.in/cdn/farfuture/KP4aOWYKaoz1mZ898YHOEs277yvkMSUmU4lg-SsnFxU/1665650463/sites/default/files/inline-images/cmo43434.jpg)
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இன்று (13/10/2022) நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் வினி மகாஜன் இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா இ.ஆ.ப., ஜல் ஜீவன் திட்டத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் விகாஸ் ஷீல் இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது இ.ஆ.ப., தமிழ்நாடு உயிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.