ராணிப்பேட்டை மாவட்டம் அசநெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவருடைய மகன் சஞ்சய்(22), ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி அவருடைய மகன் குமரேசன்(29), இருவரும் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இரவு வேலை முடித்துவிட்டு சேந்தமங்கலம் பகுதியில் தொழிற்சாலை பேருந்தில் இருந்து இறங்கி சஞ்சய் தனது நண்பரான குமரேசனை அவரது வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று உள்ளனர்.
அப்பொழுது ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே செல்லும்பொழுது காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நெமிலி காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த இரண்டு உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நெமிலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.