![Chief Minister MK Stalin to leave for Dubai tomorrow on a four-day visit!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Odx7E-WEm5nb9B-9n-5ymfDCUoC2CHd8jcQ4tkQhOdI/1648036149/sites/default/files/inline-images/mks4434_2.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக, நாளை (24/03/2022) மாலை துபாய் புறப்பட்டு செல்கிறார்.
192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு சார்பில் கைத்தறி, விவசாயம், சிறுத்தொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம் பெறவுள்ளன. இவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பின்னர், பன்னாட்டு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் தமிழக முதலமைச்சர், தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் படி கோரிக்கை விடுக்கவுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் பயணத்தின் போது, முதலமைச்சருக்கு ஷார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், முதலீடுகளை ஈர்க்க மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது. அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், அணு ஜார்ஜ் உள்ளிட்டோரும் ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றன.