![TVK party at kallakurichi](http://image.nakkheeran.in/cdn/farfuture/c6xzD6uz4Bs8H8bsi0LAkCcqXWsO19ZwBbbuhChtTBs/1601987532/sites/default/files/inline-images/afsdf.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து மாபெரும் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்ததன்படி மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நூதன முறையில் விவசாயிகள், தானாகவே தூக்கு மேடையில் தூக்குப் போடுவது போன்றும், மண் சட்டிகளில் பிச்சை எடுப்பது போன்றும் மத்திய அரசின் விவசாயச் சட்ட மசோதாவைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் கோபி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.