தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்து ரயில் நிலையத்திலுள்ள அழகிய பூங்கா உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். பின்னர் டிக்கட் கவுண்டருக்கு எதிரே இந்திய ரயில்வே உணவு மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டியை திறந்து வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கும் நேரத்தை குறைப்பதற்காக இந்திய ரயில்வே சார்பாக யூ டி எஸ் என்ற அப்ளிகேஷன் மூலம் ஆண்ட்ராய்ட் மொபைலில் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வேலை நேரங்களில் செல்லும் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கப்படும் என்றார் இவருடன் சிதம்பரம் நிலைய அதிகாரி கனகராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.