திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல், அரசு பஸ் டிரைவர். இவர் மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகன் பிரபு துறையூர் நகராட்சியில் சுகாதாரதுறையில் டிரைவராக இருக்கிறார். மகள் பிரியா கடந்த ஒருவடத்திற்கு முன்பு திருமணம் ஆகி தஞ்சையில் வல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தங்கவேல் பணி முடிந்ததும் வீட்டிற்கு வந்தவர், சாப்பிட்டு விட்டு குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கினார். அப்போது வீட்டின் கொல்லைப்புற கதவை அடைத்த அவர், தாழ்ப்பாள் போடாமல் தூங்கி விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை எழுந்து மாடியிலிருந்து கீழ் இறங்கி குளித்துவிட்டு உடையை மாற்ற பூஜை அறைக்கு சென்று பார்த்த போது, பீரோ திறந்து துணி எல்லாம் வெளியே சிதறி கிடைந்து . உடனே நகைப்பெட்டியை பார்த்த போது அதில் இருந்த தங்ககாசு, நெக்லஸ், செயின், மோதிரம், ஆரம், என 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கவேல் இது குறித்து உடனடியாக துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தங்கவேல் மகள் பிரியா தனது வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பதால் தங்கள் பாதுகாப்பில் 40 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்தாக சொல்லி தங்கவேல் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதைத்தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்கிறார்கள்.
அடுத்தடுத்து நெருக்கமான வீடுகள் உள்ள குடியிருப்பில் தங்வேல் வீடு அருகே உள்ள பிள்ளையார் கோவில் மீது ஏறி அவரது வீட்டிற்குள் சென்ற மர்மநபர் வீட்டில் ஆட்கள் தூங்கி கொண்டிருக்கும் போதே எந்த அச்சமும் இல்லாமல் தங்க நகைகள் , பணத்தை கொள்ளையடித்து சென்றது. துறையூர்நகரில் பாரதிநகர், புதுக்காட்டு தெரு, செக்கடித்தெரு, காமராஜர் தெரு என்று அடுத்துதடுத்து 18ம் தேதி முதல் தொடர்ச்சியாக மர்மநபர்கள் கைவரிசை காட்டி வருவது பொதுமக்களிடையே பெரிய அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.