Skip to main content

சென்னையில் எஸ்.ஐ செல்போனை திருடிய பலே திருடர்கள்! - ஐ.எம்.ஐ நம்பர் மூலம் டிராக் செய்த போலீசார்!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018
the


சென்னையில் வீட்டில் தூங்கியபோது எஸ்.ஐ செல்போனை திருடர்கள் திருடி சென்றனர். திருடிய சற்றுநேரத்தில் ஐ.எம்.ஐ நம்பர் மூலம் கொள்ளையர்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர்.

 

 

மன்னார்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் (35) விளையாட்டு பயிற்சிக்கு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து கோட்டூர்புரத்தில் வசிக்கும் நண்பர் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது, ஜன்னலின் அருகே தன்னுடைய செல்போனை வைத்துவிட்டு அயர்ந்து தூங்கினார்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது அவரது செல்போன் மாயமாகி இருந்தது. இணையதளம் மூலம் செல்போனின் இஎம்ஐ நம்பரை வைத்து சோதனை செய்தபோது பெசன்நகர், திடீர் நகரை காட்டியுள்ளது. உடனே, சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பிரபாகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்து பாதுஷா (29), ராஜேஷ் (22) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது எஸ்.ஐ.யின் செல்போனை திருடியது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், டேப், லேப்டாப் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரும் செல்போன் திருடுவதை தொழிலாக செய்து வந்ததும், விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்