கொள்ளிடம் ஆற்றில் அதிகம் தண்ணீர் திறக்கப்பட்டிப்பதால் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் ஆளுமை தலைமை அலுவலகத்தை வைத்திருந்த ஆங்கிலேயர்கள் கடலூர் மாவட்டத்திற்கு சாரட் வண்டி மற்றும் சீப்களில் சென்றுவரும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அனைகளுடன் கூடிய பாலத்தை கட்டினர். அந்த பாலமை சென்னையில் இருந்து கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் பிரதான பாலமாக இருந்துவருகிறது.
பிறகு சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் அதனை முறையாக பராமறிக்காமலும், இரவு நேரங்களில் கையூட்டு வாங்கிக்கொண்டு கனரக வாகனங்களை அனுமதித்தும் பாலம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பழுதானது, அதன் பிறகு போக்குவரத்தை முழுமையாக நிறுத்தப்பட்டு பாலத்தை புதுபித்து போக்குவரத்தை அனுமதித்தனர். பாலம் புதுப்பித்த ஆறாவது மாதமே பாலம் மீண்டும் வாங்கிக்கொண்டது, மீண்டும் போக்குவரத்தை நிறுத்தி பாலத்தின் இருபுறமும் கண்கிரிட் கட்டை அமைத்து ஒரு வழி சாலையாக போக்குவரத்தை அனுமதித்துவந்தனர்.
இந்தநிலையில் கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனை பாதிப்பு இல்லாமல் வெளியேற்றும் விதமாக கல்லனையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்துள்ளனர், கடந்த நான்கு நாட்களாக இருகரையையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்லும் நிலையில் இன்று இரவு முதல் 3 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்ற உள்ளது. அதன் முன்னெச்சரிக்கையாக அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.
கும்பகோனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்துகள் நீலத்தநல்லூர் பாலத்தின் வழியாக திருப்பிவிட்டுள்ளனர்.