Skip to main content

ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்த திருநங்கை ஓவியா மேரி! 

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

Transgender Ovia Marie who filed a petition with the Collector!

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் திருநங்கை ஓவியா மேரி என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 


அந்த மனுவில் அவர், திருச்சி திருவெரம்பூர் பாப்பா குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஓவியா மேரி(36). பி.எஸ்.சி பட்டதாரியான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் திருநங்கையாக மாறி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்பதால் கடந்த நான்கு மாதங்களாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

திருச்சி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுகென திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை செய்வதற்கென தனி சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும். அதேபோல் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்