ஆரணி பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் செயல் தலைவருமான விஷ்ணுபிரசாத் நாடாளுமன்றத்தில் பேசியதாவது
"காட்பாடி விழுப்புரம் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றியதன் நோக்கமே, தூரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தான். அகலரயில்பாதை பணிகள் முடிந்து இரயில்கள் இயங்க தொடங்கி 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பணிகள் முடிந்தபின்னர் இந்த தடத்தில் தினமும் 18 ரயில்கள் இயங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதைவிட குறைவாக தான் ரயில்கள் இந்த பாதையில் இயக்கப்படுகின்றன. காட்பாடி விழுப்புரம் அகல ரயில் பாதையான பின்பு ஆறு பாசஞ்சர் ரயில்கள் காலையில் மூன்று ரயில்களும், மாலையில் மூன்று ரயில்களும் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக காட்பாடி செல்லும் ரயில்கள் இன்னும் அதே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கின்றன.
இதை தவிர்த்து வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் பாண்டிச்சேரி திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ், வாரத்திற்கு மூன்றுமுறை இயக்கப்படும் புதுவை-மும்பை தாதர்எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகின்றன. வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் ராமேஸ்வரம் திருப்பதி எக்ஸ்பிரஸ் வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும்,விழுப்புரம் -ஹவுரா, விழுப்புரம் கோரக்கப்பூர், விழுப்புரம் புருலியா இயக்கப்படுகின்றன.
தற்போது திருச்சி ஹைதராபாத் வாரம் ஒருமுறை புதிய ரயில் இயங்க தொடங்கியுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் வியாழனன்று இயக்கப்படுகிறது. அதேபோல் ஹைதராபாத்லிருந்து ஒவ்வொரு திங்கள் அன்றும் திருச்சிக்கு இயக்கப்படுகிறது. அதேபோல் வாரத்தில் ஒருநாள்இயக்கப்படும் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஹைதராபாத் இயங்கத்தொடங்கியுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இரண்டு ரயில்களுமே விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி ஆகிய இடங்களில் நின்று செல்கிறது. இத்தனை ரயில்களில் இரண்டு ரயில்களை தவிர பெரும்பாலான ரயில்கள் திருவண்ணாமலை மாவட்டம், போளுர் ரயில்வே நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மத்திய ரயில்வே வாரியத்தில் முறையிட்டும் அதிவேக இரயில்கள் நிற்பதில்லை.
இந்நிலையில் இதுப்பற்றி ஆரணி பாராளமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களுள் ஒருவருமான விஷ்ணுபிரசாத் கவனத்துக்கு பொதுமக்கள் சார்பில் சிலர் இந்த தகவலை கொண்டு சென்றனர். தற்போது தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. போளுர் மக்களின் கோரிக்கை தொடர்பாக பாராளமன்றத்தில் பேசிய எம்.பி விஷ்ணுபிரசாத், என் தொகுதியில் போளுர் பேரூராட்சியில் மட்டும்மே இரயில்பாதை உள்ளது. அந்த இரயில் பாதையில் செல்லும் அதிவேக ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் சென்னை, காட்பாடி, வேலூர், போளுர் வழியாக திருவண்ணாமலைக்கு இரயில் இயக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன், வரும் நிதியாண்டில் அதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதேபோல் திண்டிவனம் டூ நகரி இரயில் பாதை திட்டத்தை வேகமாக செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் திண்டிவனம், வந்தவாசி, ஆரணி என என் தொகுதியின் பல பகுதிகள் வளர்ச்சி பெறும், இரயில்வேவுக்கும் அதிக வருவாய் வரும்" எனப் பேசினார்.