Published on 03/12/2018 | Edited on 03/12/2018

உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் தி.மு.க. எம்.பி. கனிமொழி.

இந்தநிலையில் குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக்கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா? என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலுக்கு பதிவிட்டுள்ளார்.
கனிமொழியின் மையக் கருத்து என்பது மத்திய அரசு போதிய புயல் நிவாரண தொகை கொடுக்கவில்லை என்பதுதான். ஆனால் எச்.ராஜா அதற்கு பதில் சொல்லாமல் பெரியார் சிலை பற்றி கூறி மத்திய அரசு மீதான விமர்சனத்தை திசை திருப்பியிருக்கிறார் என்று திமுகவினர் கூறுகின்றனர்.