Skip to main content

நாளை வேலூர் வரும் திமுக தலைவர் – கரூரை முந்துமா குடியாத்தம் ?

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

திமுக மாநிலம் முழுவதும்முள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்துகிறது. இதில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்.

 

VV

 

அதன்படி வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது சீவூர் ஊராட்சி. இந்த சீவூர் ஊராட்சி சபை கூட்டம் ஜனவரி 28ந்தேதி மாலை 3.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் கலந்துக்கொண்டு அந்த கிராம மக்களின் குறைகளை கேட்கிறார். அதற்கடுத்ததாக உள்ளி கூட்ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடியாத்தம் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் உரையாற்றுகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

 

 

இந்த அறிவிப்பு வேலூர் மத்திய மாவட்ட திமுகவினை அதிரவைத்துள்ளது. காரணம், திமுகவில் வேலூர் மத்திய மாவட்டத்தின் கீழ் இந்த குடியாத்தம் தொகுதி வருகிறது. இந்த மத்திய மா.செவாக இருப்பவர் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவான நந்தகுமார். வேலூர் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் காலியாகவுள்ளன. இந்த தொகுதிகளுக்கு பிப்ரவரி 9ந்தேதி வருவதாக தான் முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது திடீரென குடியாத்தம் தொகுதிக்கு மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 28ந்தேதி நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

திடீரென அறிவிக்கப்பட்டதால் இரண்டு நாளில் எப்படி ஏற்பாடு செய்வது என அதிர்ந்தவர் தற்போது வேகவேகமாக அதற்கான வேலைகளை செய்து வருகிறார். குடியாத்தம் தொகுதி வாக்குசாவடி முகவர்கள் ஒரு பூத்க்கு 20 பேர் வீதம் சுமார் 6 ஆயிரம் முகவர்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடி முகவர்களை கட்டாயம் கூட்டத்துக்கு வந்துவிட வேண்டும் என நிர்வாகிகள் மூலமாக அழைப்பிதழ் அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

 

 

கரூர் கூட்டத்தை விட குடியாத்தம் கூட்டம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என தீவிரமாக களப்பணியாற்றுகிறார் மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ. கரூரை முந்தும்மா என்பது நாளை தெரிந்துவிடும் ?.

சார்ந்த செய்திகள்