
கடலூர் மலையடிகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி கடந்த 2 மாதத்துக்கு முன்பு அங்கு இருந்த பல ஏக்கரில் பயிரிடப்பட்ட முந்திரி மரங்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மாவட்ட நிர்வாகம் முற்றிலுமாக வெட்டி சாய்த்தது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயச் சங்கம் உயர்நீதிமன்றம் சென்ற நிலையில் முந்திரி மரங்களை அகற்ற நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மலையடிக்கும் கிராமத்தில் முந்திரி மரங்களை அகற்றிய நிலத்தில் முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் கோட்டாட்சியர் அபிநயா பேச்சுவார்த்தை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் தொடர்ந்து போராடினர். இதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இருந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் 300-க்கும் மேற்பபட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.