Skip to main content

போலீஸிடம் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ். ஆபிஸர்! 

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Fake IAS officer caught by police Officer!

 

பழனி பாலதண்டாயுத பாணி கோவிலுக்கு வந்த அந்த டிப்-டாப் ஆசாமி. தம்மைப் போக்குவரத்துக் கழக எம்.டி என்று அறிமுகம் செய்து கொண்டு, பழனி அடிவாரத்தில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதியில் இலவசமாக அறை ஒதுக்க வேண்டும் என அதிகாரத் தோரணையில் கேட்டுள்ளார். 

 

அவரது ஐ.டி. கார்டை வாங்கிப் பார்த்த தேவஸ்தான ஊழியர், அது போலி என்பதைப் புரிந்து கொண்டு, நீங்க ஐ.ஏ.எஸ் ஆக இருந்தாலும், உள்ளூர் வருவாய்த்துறையில் யாராவது உங்களுக்கு சிபாரிசு பண்ணச் சொல்லுங்கள் என்றார்.

 

இதற்குப் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி குமார், பிதற்றலாகப் பேசியதுடன், அங்கிருந்து நழுவிச் செல்வதில் குறியாக இருந்திருக்கிறார். சுதாரித்த அறநிலையத்துறை ஊழியர்கள், அவரை மடக்கிப்பிடித்து பழனி அடிவாரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

போலீஸார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த குமார், காரில் சைரன், தமிழக அரசு என்று பதாகையை மாட்டிக்கொண்டு வலம் வந்ததும். பல இடங்களில் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு சலுகைகளைப் பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது. 

 

கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற குமார், அங்கிருந்தவர்களை ஏமாற்றிச் சிறப்புத் தரிசனம் செய்து விட்டு வந்ததும், பழனியில் அதேபோன்று ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கூறி சலுகைகளைப் பெற நினைத்ததும், போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்