வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் துரை நகர் பகுதியை சேர்ந்த சென்னகேசவலு இவரது மனைவி லட்சுமி. லட்சுமியின் அக்கா மகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வுக்காக வெளியூர் செல்ல வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்கள்.
![tirupattur incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/5NnNbR2OflttwzFgjaNv6zeU_spwyDkELRPat-uswM8/1571654264/sites/default/files/inline-images/robbery%20IN.jpg)
இந்நிலையில் சென்னகேசவலு இவரது வீட்டின் மேல் தளத்தை குடியிருக்கும் அருண்குமார் என்பவர் அக்டோபர் 20 ந்தேதி மாலை வீட்டில் இருந்தது கீழே இறங்கி வந்து பார்க்கும் பொழுது சென்னகேசவலு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போய் செண்ணகேசவலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே சென்னகேசவலு வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது மர்மநபர் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 சவரன் தங்க நகை மற்றும் 65 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றுயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுக்குறித்து போலீசாருக்கு தகவல் சொல்ல திருப்பத்தூர் நகர போலீசார் வந்து திருடு சென்ற வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் திருட்டு நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.